ரஷியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் செர்னி ஹிவ் நகரில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைனின் வடக்கில் உள்ள செர்னிஹிவ் நகரில் ரஷியா-உக்ரைன் படையினர் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அங்கு ரஷியாவின் போர் விமானத்தை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் விமானப்படை கூறும்போது, ‘நேற்று ரஷியாவின் 5 விமானங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.
இதுவரை 44 ரஷிய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Be First to Comment