நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளூர் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு, குறித்த தொழில் முறையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றவர்களுக்கு அனுமதிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இது குறித்து கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை சிலாபம், இரணவில எனும் இடத்தில் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை மற்றும் நண்டு குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மையை விருத்தி செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இண்டிக்கோ பிறைவேட் லிமிடெட் நிறுவனம் எனும் உள்ளூர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை பார்வையிட்டதுடன், தனியார் முதலீட்டாளர்களின் முயற்சியை வரவேற்று உற்சாகப்படுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment