கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் நேற்று (06) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரிணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment