ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது.
மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும்.
முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புத் துறைமுக நகர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்டு முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து வழங்கலை இந்தத் தொழிற்சாலையே மேற்கொள்ளும் என நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து நாட்டின் சீமெந்துத் தட்டுப்பாடு இல்லாமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment