மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான முதலீடு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதன் உற்பத்திச் செயல்முறை 2024 இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் நிர்மாணப் பணிகளைத் தொடங்கிய இந்த தொழிற்சாலைக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
நவீன வசதிகளைக் கொண்ட இந்த தொழிற்சாலை, தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
இந்த தொழிற்சாலையின் வருடாந்த உற்பத்திக் கொள்ளளவு 04 மில்லியன் மெற்றிக் டன் எனவும், முதற்கட்டமாக 2.8 மில்லியன் மெற்றிக் டன் சீமெந்தை உள்நாட்டுச் சந்தைக்கு வழங்கும் எனவும் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Be First to Comment