Press "Enter" to skip to content

மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் மீதான தாக்குதல்..! கண்மூடித்தனமான விமர்சனத்தை நிறுத்துங்கள், எனக்கு அந்த தேவை கிடையாது..

யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருக்கின்றார்.

நேற்றையதினம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எனது பெயரையும் கட்சியினுடைய பெயரையும் திட்டமிட்டு பழிவாங்கும் விதத்தில் சில அரசியல்வாதிகள் செயற்ப்பட்டுள்ளனர். ஆனால் அத்தகைய தேவை எனக்கில்லை.

அடித்ததாகக் கூறப்படும் நபர் எனது கட்சியில் அங்கத்தவரோ அல்லது எனது ஆட்சியின் அடையாள அட்டையை பயன்படுத்துபவரோ அல்ல. சிலர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை விளைவித்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில்

பொலிஸார் பொதுமக்களை கையாளும் விதம் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஆகவே எவர் குற்றம் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இதுவே எனது நிலைப்பாடாக உள்ள நிலையில்

அரசியலுக்காக சேறுபூசும் செயற்பாடுகளை மேற்கொள்வோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *