மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகீசன் விதுசன் என்ற ஒரு வயதும் ஐந்து மாதமுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு ஆயுர்வேத வைத்தியம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து நோய் தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று பிற்பகல் 5 மணிக்கு சாவச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குழந்தை டெங்கு காய்ச்சலால் மரணமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
மரண விசாரணையை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Be First to Comment