களுத்துறை மத்துகம பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று (6) கைதுசெய்துள்ளனர்.
மத்துகம பாலிகாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இரவு, மத்துகம காமினி மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார்.
சந்திமா தில்ஹானி பெரேரா (40) என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில், மத்துகம பிரதேசத்தில், குற்றச்செயல் கும்பல் ஒன்றின் தலைவரின் மனைவி களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
Be First to Comment