நேற்று முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் புதிய கொலணி மாங்குளத்தினை சேர்ந்த 14 அகவையுடைய தயாபரன் தர்மினி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் உடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மாங்குளம் மகா வித்தியாலய மாணவியின் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
Be First to Comment