Press "Enter" to skip to content

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டிக்கு யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர் தகுதி!

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய கபடி அணியில், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரான ஆர்.பென்சி என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப் போட்டியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
விமான பயணச்சீட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளகப் போக்குவரத்து உள்ளடங்கலாக உரிய வசதிகளை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் மற்றும் ஆசிய கபடி சம்மேளனத்தின் அனுசரணையில் ‘தி பங்களாதேஷ் கபடி கூட்டமைப்பு பங்கபந்து கோப்பை – 2022’ சர்வதேச கபடி போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *