Press "Enter" to skip to content

உக்ரைனின் 5 நகரங்களில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து வருகிறது.

மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சிலமணிநேரங்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. கிவ், சுமி, கார்கிவ், மரியு போல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இந்திய நேரப்படி இன்று 12.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மைய தலைவர் மிகைல் மிஜின்சேவ் கூறும்போது, ‘இன்று 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் தகவல் உக்ரைன் துணை பிரதமர் வேரேசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது’ என்றார்.

ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் அதனை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *