தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டிய கணவனை பொலிஸார் கைது செய்தனர். தற்கொலை செய்துகொண்டவர் 16 வயது சிறுமி என்பதால், கைதானவர் மீது போக்சோ வழக்கு பாய்கிறது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி அங்கமுத்து மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன் (27), பால்காரர். இவர், ஓர் ஆண்டுக்கு முன், ராசிபுரத்தை சேர்ந்த செல்வத்தின் 16 வயது மகளான, சிறுமி உமாமகேஷ்வரியை செந்தாரப்பட்டியில், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தார்.
அப்போது, சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அப்போதே மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பிலும் பிரச்னை எழவில்லை.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரவு மணிகண்டன் தனது மனைவி உமாமகேஷ்வரியுடன் கடுமையாக தகராறு செய்ததாக் கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த உமாமகேஷ்வரி இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில், பொலிஸார், மர்ம மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
முடிவில், உமாமகேஷ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்ததை அடுத்து, இ.பி.கோ.174 இன் கீழ், பொலிஸார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர். மேலும், 16 வயது சிறுமியை திருமணம் செய்து தற்கொலைக்கு தூண்டியதால், மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
Be First to Comment