ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்நாட்டிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
கொழும்பு செட்டித் தெரு தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 135,000 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 125,000 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment