யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது.
சுதேஸ்வரன் சுதர்சன் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு இளைஞனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்
Be First to Comment