மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டவேளை காரைநகரில் இருந்து யாழ். நோக்கி சென்ற கப் ரக வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பதுளையில் இருந்து யாழிற்கு வந்திருந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment