பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று புதன் கிழமை வீடொன்றுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் வீட்டிலிருந்தவர்களை தாக்கி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த
சந்தேகநபரொருவரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் 20 வயதுடைய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில்
அவர் ஏற்கனவே வாகனம் நகைக்கொள்ளை மற்றும் கொலைமுயற்சி போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவரென தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர் இன்றையதினம் யாழ்.நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்
இது பற்றிய மேலதிக விசாரணைகளை யாழ்.மாவட்ட பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Be First to Comment