சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக நாட்டை வந்தடைந்த 2,600 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து, சமையல் எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாளாந்தம் 900 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவினை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு மற்றும் மின் துண்டிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயங்கிய பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Be First to Comment