நாட்டில் பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால் மாவின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மற்றும் 400 கிராம் பாக்கெட் ரூ.120 அதிகரிக்கும். ம்ேலும் இது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Be First to Comment