எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் பதுளை மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைகள் எதனையும் தமது கட்சி சமர்ப்பிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த மாநாட்டில் தெரிவித்தார்
Be First to Comment