எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
இதன்போது, எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
அதேநேரம், டீசல் விலை அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் பேருந்து போக்குவரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களில் அரசாங்கத்தினால் இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில், வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாளை முதல் முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணங்களை அதிகரிப்பதற்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஆரம்ப கிலோமீற்றர் தூரத்திற்கு 70 ரூபாவாகவும், ஏனைய கிலோமீற்றருக்கு 55 ரூபா என்ற அடிப்படையிலும் விலையினை அதிகரிக்கவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment