தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவும் திட்டம் தொடர்பில் அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் ( IMF) இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.
இலங்கையின் பிரேரணையை சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் முன்வைப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஏப்ரல் நடுப்பகுதியில் வாஷிங்டனுக்குச் செல்வார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகுதி ஒரு ட்வீட்டில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் இலங்கையின் கடனை மறுசீரமைப்பது அல்ல என தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தாண்டு சுமார் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது, இதில் 1 பில்லியன் டொலர் ISB முதிர்வு ஜூலையில் உள்ளது.
கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட கால மதிப்பாய்வில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் “நம்பகமான மற்றும் ஒத்திசைவான” மூலோபாயத்தை
செயற்படுத்துமாறு IMF அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்கிறது, அது தாங்கமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது, குறைந்த சர்வதேச இருப்புக்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பாரிய நிதி தேவைகள் இருக்கும் என IMF தெரிவித்துள்ளது.
நெருக்கடியிலிருந்து ஒரு வழியைக் கண்டறிய, கடன் மறுசீரமைப்பு, அந்நிய செலாவணி நெருக்கடி, வருவாய் ஈட்டுதலை மேம்படுத்துதல் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவற்றில் அரசாங்கம் IMF இடம் உதவி கேட்கவுள்ளது.
Be First to Comment