தனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள், ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் இதன் காரனாகவே ராஜபக்ஸவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய ஆட்சி காலத்தில் மோசடிகளுக்கு இடமளிக்காதமையினாலேயே யுத்தத்திற்கு மத்தியிலும் நாடு வங்குரோத்து நிலையை அடையாமல் தவிர்க்க முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என குற்றம் சாட்டிய அவர்,
வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மோசடி, தனியார் வங்கிகளிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றுக்கொண்டமை என்பனவே இந்நிலைக்கு காரணம் எனக் கூறினார்.
மேலும் மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைத்தமை மூலம் அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜபக்ஸ யுத்தத்தை வெற்றி கொள்ள நானே காரணம்”!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment