Press "Enter" to skip to content

வடக்கு – கிழக்கு நீதிபதிகளுக்கு வழங்கப்படவுள்ள இடமாற்றம்!

வடக்கு, கிழக்கு நீதிபதிகள், நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிச் சேவை அலுவலர்களுக்கான வருடாந்திர இடமாற்றத்தின் கீழ் குறித்த மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றமானது எதிர்வரும் ஏப்ரல் 04-03-2022 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

  • மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
  • பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி காயத்திரி சைலவன், மல்லாகம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார்.
  • மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார்.
  • யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், மட்டக்களப்பு நீதிவானாக மாற்றப்படுகிறார்.
  • மன்னார் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், மல்லாகம் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
  • நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் ஹிபத்துல்லா சமட், மன்னார் மாவட்ட நீதிபதியாக முதல் நியமனத்தைப் பெறவுள்ளார்.
  • மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.கருணாகரன், வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
  • வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எச்.எம்.எம். பாஷில், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
  • மட்டக்களப்பு மேலதி நீதிவான் ஜீவராணி கருப்பையா பண்டாரவளை நீதிவானாக மாற்றப்படுகிறார்.
  • நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார், களுவாஞ்சிகுடி நீதிவானாக முதல் நியமனம் பெறுகிறார்.
  • மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.ரிஷ்வான், பொத்துவில் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்.
  • நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் பி.ஆர்.ஐ. ஜமில், கிளிநொச்சி மேலதிக மாவட்ட நீதிபதியாக முதல் நியமனம் பெறுகிறார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *