றம்புக்கனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹேனேபொல பிரதேசத்தில் குடும்ப தகராறின் காரணமாக, கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் காவல் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர், பத்தம்பிட்டிய – றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
றம்புக்கனை காவல்துறையினர் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment