இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டயாழ்ப்பாண மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துமீறிய இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்களுக்கு இந்திய அரசினால்உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்பொதி வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட இந்திய துணைத்தூதுவர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலர்கள்கடற் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment