மருத்துவ பீடத்துக்கான மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்
By admin on March 14, 2022
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2020 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய உயிரியல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்துக்கு 1,961 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 1,480 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனரென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் உயர்தரத்துக்கு தோற்றிய மாணவர்களில் பல்கலைக் கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது
Be First to Comment