Press "Enter" to skip to content

ஊர்காவற்றுறையில் கர்பவதி பெண் கொலையின் பிரதான சந்தேகநபர் நெடுந்தீவில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவன்! விசாரணையில் அம்பலம்

ஊர்காவற்றுறையில் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி கர்ப்பவதி பெண் ஒருவர் குரூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை 5 வருடங்களின் பின் நடைபெற்றுவரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நெடுந்தீவில் 12 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் துாக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்.

குறித்த சந்தேகநபர் நேற்றய தினம்  ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில்  முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது-27) என்ற பெண் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தியோகத்தரான பெண்ணின் கணவர், பணிக்குச் சென்றிருந்தபோதே இந்தக் கொலை இடம்பெற்றது.படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் கண் கண்ட சாட்சியாக பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட வாய்பேச முடியாத சிறுவன் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்கள் இருவரையும் அடையாளம் காட்டியிருந்தார்.இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் 5 வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சந்தேகநபர்கள் இருவரும் 17 மாதங்களின் பின் மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கொலை இடம்பெற்று்ப ஒரு வருடமாக வழக்கு இழுத்தடிப்புச் செய்யப்பட்டதால் ஊர்காவற்றுறை நீதிமன்றின் அப்போதைய நீதிவான் ஏ.எம்.எம். றியாழ், விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகளின் பின் முதன்மை சந்தேக நபர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலையாளியான நெடுந்தீவைச் சேர்ந்த நபருக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனை தீர்ப்பளித்திருந்தார்.

சிறுமியைக் கொலை செய்த குற்றவாளியே ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த வழக்கில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்ற விசாரணை பிரிவினர்

முதன்மை சந்தேக நபரை அவரது தண்டனை சிறைச்சாதி லையில் வைத்து கைது செய்து நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை காவலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *