Press "Enter" to skip to content

கொரோன ஒரு மரணம் மட்டுமே

நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,416 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,073 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 656,814 ஆக அதிகரித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *