பாசையூர் – ஈச்சமோட்டை பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 25 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதாக யாழ்.பொலிஸார் கூறியுள்ளனர்.
வீட்டில் வயோதிபர் மட்டுமே வசித்துவந்த நிலையில் அவர் வெளியில் சென்றிருந்ததை சாதகமாக பயன்படுத்திய கொள்ளை கும்பல் வீட்டை உடைத்து உள்புகுந்து சுமார் 25 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
Be First to Comment