மன்னார், பேசாலை பிரதேசத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க வகையில் காற்றாலை மின் ஆலைகளை உருவாக்குவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.
காற்றாடி மின் ஆலைகளை பொருத்தப்பட்டிருப்பதால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் துறைசார்ந்தவர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதனிடையே
பேசாலை பிரதேசத்தில் கரை வலைத் தொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்கள் எதிர்கொள்ளும் தொழில் ரீதியான சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்தார்
Be First to Comment