Press "Enter" to skip to content

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிவேன்: எமது தீர்மானங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜனாதிபதி

வருடாந்த கடன் தவணை மற்றும் பிணை முறி கொடுப்பனவுகளை செலுத்தும் முறைமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி போது இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சவால்மிக்கதொரு சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறேன்.

மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் அறிந்துள்ளோம். எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார துண்டிப்பு தொடர்பிலும் நன்கு அறிந்துள்ளேன்.

கடந்த 2 மாதங்களில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வருத்தமடைகின்றேன். அது தொடர்பில் செய்ய முடியுமான அனைத்தையும் நாம் செய்த போதிலும், எமது கட்டுப்பாட்டை மீறி அந்த நிலை மோசமடைந்தது. நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை நான் ஏற்பேன்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்கிறேன். அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார பேரவையும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக ஆலோசனை சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் கண்காணிக்கப்படும்.

எனவே, மக்களுக்காக நாம் மேற்கொள்ளும் தீர்மானங்கள்மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலை இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. முழு உலகமும் எதிர்பார்க்காத அளவு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *