யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
13 வயதான குறித்த சிறுவனுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சோி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்ஸன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , வழக்கு தொடர்பில் விசாரித்த நீதவான் , ஆசிரியருக்கு பிணை வழங்கினார்.
Be First to Comment