Press "Enter" to skip to content

வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கு மாகாண தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் முதல்கட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பூநகரி பிரதேச பயனாளர்களுக்கும் உதவிப் பொதிகளை வழங்கி வைத்தார்,

இதேவேளை

பூநகரி, கௌதாரிமுனையில் மீள்புதுப்பிக்கத்தக்க மின் சக்திப் பிறப்பாக்கிகளை அமைப்பதற்கு தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில், பிரதேச மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான நேரடி விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

மேலும் பிரதேச மக்களின் வாழ்வியலை பாதுகாத்து – வலுப்படுத்தும் வகையிலும், நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் திட்டங்கள் அமையுமாயி்ன் அவை வரவேற்கப்படும். – கௌதாரி முனையில் மீள்புதிப்பிக்கத்தக்க மின் உற்பத்திக் கட்டமைப்பு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, முன்னைய நிர்வாகத்தின் முறைகேடான செயற்பாடுகள் காரணமாக சங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீண்டு, முன்னோக்கி நகர்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, அவரது யாழ் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்படத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *