Press "Enter" to skip to content

பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை இன்றையதினம் எடுத்தனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் முருகன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே விநாயகர் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *