கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் மணமகனின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் மணமகளின் முன்னாள் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 51 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் கடந்த 16ஆம் திகதி தனது திருமணத்தை பதிவு செய்வதற்காக இரவு வீட்டில் திருமண நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாார்.
திருமண நிகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் இரவு 10 மணியளவில் மணமகளின் முன்னால் கணவர் அங்கு வந்து மோதலில் ஈட்டுள்ளார். மோதல் தீவிரம் அடைந்ததால் கத்தியில் மணமகளின் கழுத்தை வெட்டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போதே உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்ற நிலையில் நேற்று காலை அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மணமகள் மொரட்டுவை சொய்ஸாபுர பிரதேசத்தை சேர்ந்த 48 லயதுடைய பெண் எனவும் அவரது முதலாவது திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment