காரைநகர் மானிப்பாய் வீதி திருத்தம் நடை பெறுகிறது. சுழிபரம் மூளாய் பகுதியில் வெறும் கற்களை மட்டும் பரவி ஒரு மாதத்திற்கு மேலாகியும் முதல் கோட் தார் ஊற்றப்படாமல் மனிதர் சுவாசிக்க முடியாத புழுதி எழுந்து வீதி இருமருங்கிலும் வதிவோர் வர்த்தக நிலையங்கள் நடாத்துவோர் பணியாளர்கள் வீதியால் பயணிப்போர் அனைவரும் காச்சல் தடிமன் போன்ற சுவாச நோய்களு எதிர் கொண்டுள்ளனர். பார்க்குமிடமெங்கும் புழுதி எழுந்து காணப்படுகின்றது. பல பாடசாலைகள் இவ் வீதியில் அமைந்துள்ளது. ஆடைகள் அனைத்தும் புழுதியில் குளித்து பிள்ளைகள் வீதியால் செல்கின்றனர். காலையும் மாலையும் தண்ணீர் அடிக்கின்றனர். அடிக்கும் தண்ணீர் போதவில்லை. வீதி வேலைகள் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. வலி மேற்கு பிரதேச சபை தலைமை அலுவலகம் இவ்வீதியிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. உரியவர்கள் கவனம் செலுத்தி உடனடியாக ஒரு கோட் தாராவது ஊற்றி புழுதியை அடக்காவிட்டால் பெரும் சுவாச நோயை இந்த வெயில் காலத்தில் இம்மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
சுழிபுரம் மூளாய் பிரதான வீதியில் பயணிப்போர் வதிவோர் ஆபத்தான சுவாச நோயில் பீடிக்கப்படுகின்றனர்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment