புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையம் சென்ற வள்ளிபுனம் மாணவன் ஒருவன் வேனில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
இவர் கடத்தி செல்லப்பட்ட வேனுக்குள் இரு சிறுவர்கள் கை,கால் கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட நிலையில் இருப்பதாக தப்பித்த மாணவன் தகவல் தெரிவித்துள்ளார்.
வேனை வனப்பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது குறித்த மாணவன் வேனில் இருந்து தப்பி ஓடி வந்த நிலையில் அடிகாயங்களுடன் உறவினர் மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்த்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment