யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது……
விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள் பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 200 மில்லியன் ரூபா செலவில், யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ச மற்றும் , கௌரவ கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட பிரதிநிதிகள்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கயன் இராமநாதன்,மாவட்ட அரசாங்க அதிபர்,மற்றும் துறைசார் அதிகாரிகள்
ஆகியோரின் பங்குபற்றலுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…
Be First to Comment