வட மாகாண மக்களை நாம் ஒரு போதும் மறக்க போவதில்லை என்பதுடன் கைவிடப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கிற்கும், தெற்கிற்குமான பண்பாட்டு பாலமாக திகழும் யாழ்தேவி தொடருந்து சேவையினையும் மீள ஆரம்பித்தோம்.
எனினும் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நல்லிணக்கம் என்று ஆட்சிக்கு வந்தோர் அபிவிருத்திகளை இடைநிறுத்தினர்.
எவ்வாறாயினும், மீண்டும் தமது ஆட்சியின் ஊடாக வட மாகாணத்தில் துரித அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக குறித்த யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அதேநேரம், இன்று காலை நல்லூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை, பிரதமரின் விஜயத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Be First to Comment