முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – முல்லைத்தீவுக்கிடையில் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றை குறித்த தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன், முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment