முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 வருடமும் 2 மாதங்களும் வயதுடைய ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை தனது பெற்றோருடன் இருந்தபோது பெற்றோரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று தண்ணீர் நிரம்பிய சிறிய தொட்டியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடப்பதைக் கண்ட பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment