சர்வகட்சி மாநாட்டில் அனைத்து கட்சிகளையும் பங்கேற்குமாறு அழைப்பு – மைத்திரிபால சிறிசேன
By admin on March 21, 2022
சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது அரசாங்கத்திற்கு விசேட உதவிகளை வழங்குகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தை பலப்படுத்துவது அல்ல ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரூம் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது.
சில அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள நிலையில், சிலர் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் அனைத்து தரப்புக்களையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Be First to Comment