சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவும், குறித்த அமர்வில் பங்கேற்றுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் தொடர்பான விடயங்கள், காலநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன
Be First to Comment