நிலையான அபிவிருத்தி மற்றும் 13 விடயப்பரப்புகளில் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த கடிதத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியமும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Be First to Comment