Press "Enter" to skip to content

கடந்த மாதம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதவர்களில் சித்தார்த்தன் எம்பியும் இடம்பிடித்துள்ளார்

பெப்ரவரி மாதம் நாடாளுமன்ற அமர்வுகளில்
கலந்துகொள்ளாதவர்களில் சித்தார்த்தன் எம்பிக்கும் இடம் கிடைத்துள்ளது

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இடம்பிடித்துள்ளார்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெப்ரவரி மாதத்தில் ஒருமுறைகூட கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இவர்களில் இரா.சம்பந்தன் மூப்பு நிலை காரணமாகக் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், தர்மலிங்கம் சித்தார்த்தன் எதற்காகக் கலந்துகொள்ளவில்லை என்று அவருக்குவாக்களித்த மக்கள் தம்மைத்தாமே கேள்வி எழுப்பி விசனம் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் –

இவர் ஆயுதக்குழுவாக இருந்து எமது மக்களுக்குப் பல அநாகரிக கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூடாரத்தில் வந்துள்ள ஒரே காரணத்துக்காகவும், எமது மண்ணின் முடிசூடா மன்னர் தர்மலிங்கத்தின் வாரிசு என்ற காரணத்துக்காகவும் அவர் மக்களுக்கு வாரிவழங்கியமைக்காகவும் நாம் அந்தக் கனவானிடம் பெற்ற நன்றிக்கடனுக்காக இவருக்கு வாக்களித்தோம். கடந்த முறை இவர் நாடாளுமன்றம் சென்று சபாநாயகரை முதலாவது அமர்வில் வாழ்த்தியதைத் தவிர எதுவும் பேசவில்லை என்று இடம்பிடித்தார். இதனால் அவரது வாக்குவங்கி அரைவாசிக்குமேல் குறைந்து மயிரிழையில் தெரிவானார். இம்முறையும் கடந்த மாதம் நாடாளுமன்றுக்கே செல்லவில்லை என்ற இடத்தைப் பிடித்துள்ளார். இனி, தர்மரே! மன்னியுங்கள் என்று கூறிவிட்டு நாம் சிந்தித்துச் செயற்படவேண்டியதுதான். – என்றனர்.

மேலும் அமைச்சர் திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும் குமார வெல்கம ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *