சர்வகட்சி மாநாட்டில் தமிழீழ விடுதலை இயக்கம் பங்கேற்காது என்று அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் புதன்கிழமை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநட்டில் பங்கேற்பதில்லை என்று பல கட்சிகளும் அறிவித்து வரும் நிலையில் ரெலோ கட்சி இன்று மட்டக்களப்பில் வைத்து தனது நிலைப்பாட்டை அறிவித்தது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) என்பன கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது





Be First to Comment