சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்களிற்கு மேல் நீடிக்கலாம் இந்தியாவின் கடன் உதவியிலிருந்து கிடைத்துள்ள நிவாரணம் மே மாதம் நடுப்பகுதி வரை நீடிக்காது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை தேவைப்படும் நிதியை பெறுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வகட்சிமாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு ஒரேயொரு வழியே உள்ளது ,கூட்டமைப்பை உருவாக்க கூடிய புதிய நட்பு நாடுகளை அணுகி நிதிஉதவியை கோருவதே அது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளில் இந்தியா சீனா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இடம்பெற்றிருக்கவேண்டும் இவை சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள மு;னனாள் பிரதமர் 2002 முதல் 2004 வரையான காலப்பகுதியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டவேளை நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை நாங்கள் இதுபோன்ற உலகநாடுகளின் கூட்டமைப்பை கொண்டிருந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலே குறிப்பிட்ட நாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன-அதனை சரிசெய்யவேண்டும் என ரணில்விக்கிரமசி;ங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளுடனான எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன – இந்த நிலைமையை முக்கியமாக நாங்;களே உருவாக்கிக்கொண்டோம்,அரசாங்கம் இந்தியா ஜப்பானுடன் இணைந்து முன்னெடுத்த பல திட்டங்களை கைவிட தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் இவற்றிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இந்த அரசாங்கம் சில விவகாரங்களை உருவாக்கியுள்ளது இதற்கும் தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடனான விவகாரம் மனித உரிமை பேரவை தொடர்பானது என தெரிவித்;துள்ளஅவர் அந்த கரிசனைகளிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டால் நாட்டின் மீதான நம்பிக்கை அதிகளவு வெளிநாட்டு முதலீட்டை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய மாநாட்டில் கலந்துகொள்ளாத கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment