நாட்டில் நாளை வியாழக்கிழமை 6 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பி, கியூ, ஆர், எஸ் வலயங்களில் காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், ரி, யூ, வி, டபிள்யூ வலயங்களில் மதியம் ஒரு மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், பின்னர், பி. கியூ, ஆர், வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 7.20 மணி வரையிலும், எஸ், ரி, யூ வலயங்களில் இரவு 7.20 தொடக்கம் இரவு 9.10 மணி வரையிலும், வி, டபிள்யூ வலயங்களில் இரவு 9. 10 முதல் இரவு 11 மணி வரையிலும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
இதேபோல, ஏ, பி, சி, டி, வலயங்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11.20 வரையிலும் ஈ, எவ், ஜி, எச் வலயங்களில் முற்பகல் 11.20 மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரையிலும், ஐ, ஜே, கே, எல், வலயங்களில் பிற்பகல் 2.40 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பின்னர், ஏ, பி, சி, டி வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 7.40 மணி வரையிலும், ஈ, எவ், ஜி, எச் வலயங்களில் இரவு 7.40 மணி முதல் இரவு 9.20 மணி வரையிலும், ஐ, ஜே, கே, எல் வலயங்களில் இரவு 9.20 முதல் இரவு 11 மணி வரையிலும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
Be First to Comment