வானொலி பெட்டி ஒன்றை அடகுவைத்த நபர் ஒருவர் அதனை மீட்க சென்றிருந்தபோது உருவான வாய்த்தர்க்கம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கிரான்ட்பாஸ் – வெஹரகொடெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.
அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment