சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்ததுள்ளனர்
கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை
வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.
அவரது இளைய சகோதரர் சிவலிங்கம் திலகரிஷன் வெடிவிபத்தில் படுகாயமடைந்தார்.
இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கபிரியேல் முத்துலிங்கம் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட நபர், ரமேஸிற்கு வெடிமருந்துகளை வெட்டி விற்பனை செய்துள்ளார்.
யுவராஜ் இறந்ததையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம்,
பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சந்தேகநபர் இரகசியமாகச் சென்ற வேளையில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அவர் கைதானார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்
சக்தி வாய்ந்த வெடிமருந்து கடத்தல் சம்பவம்: பளையில் ஒருவர் கைது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்
- வர்த்தக அமைச்சருக்கு நிவ் ரத்ன அரிசி உரிமையாளர் பதிலடி
- யாழில் 300 பவுண் தங்க நகைகளை திருடி கொழும்பில் சொகுசு வாழ்க்கை! புங்குடுதீவை சேர்ந்த நபர் ஆயுதங்கள், கைக்குண்டுடன் கைது!!
- காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அநுர அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது- அமலநாயகி ஆதங்கம்..!
Be First to Comment